மளிகைச் செலவை பாதியாகக் குறைக்க 5 எளிய வழிகள்! (Monthly Grocery Budget Tips)
வணக்கம் நண்பர்களே! நம்மள மாதிரி மிடில் கிளாஸ் வீட்ல மாசம் மாசம் போடக்கூடிய பட்ஜெட்டில அதிகப்படியான செலவு மளிகைப் பொருட்களுக்குத்தான் ஆகிறது. இதைச் சரியாகத் திட்டமிட்டால், தரமான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்க முடியும். நம்ம வீட்டுச் சேமிப்பை உயர்த்த, இல்லத்தரசிகளுக்கு மிகவும் உதவியான சில ரகசிய குறிப்புகள் இதோ!
1. மளிகைப் பட்டியல் (Shopping List) அவசியம்:
கடைக்குச் செல்வதற்கு முன்பாக வீட்டில் என்னென்ன பொருட்கள் தீர்ந்துவிட்டது என்பதை ஒரு டைரியில் குறித்துக் கொள்ளுங்கள். இது தேவையற்ற பொருட்களைத் தூண்டுதலின் பெயரில் (Impulse Buying) வாங்குவதைத் தவிர்க்க உதவும்.
2. மொத்தமாக வாங்குதல் (Bulk Buying):
அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்ற நீண்ட நாள் கெடாத பொருட்களை மாதத்திற்கு ஒருமுறை மொத்தமாக (Wholesale) வாங்குங்கள். இது சில்லறை விலையை விட 10% முதல் 15% வரை லாபத்தைத் தரும்.
3. சீசன் காலப் பொருட்கள்:
அந்தந்தப் பருவகாலத்தில் கிடைக்கும் தானியங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவது பணத்தை மிச்சப்படுத்தும். குறிப்பாக பருப்பு வகைகள் விலை குறைவாக இருக்கும்போது வாங்கிச் சேமிக்கலாம்.
4. பொருட்களைச் சேமிக்கும் முறை:
பொருட்களை வாங்கி வந்தவுடன் அவற்றைச் சுத்தமான டப்பாக்களில் போட்டு வையுங்கள்.
பருப்பு வகைகள்: சிறுதுண்டு வசம்பு அல்லது காய்ந்த மிளகாய் போட்டால் வண்டு வராது.
புளி: உப்பு கலந்து வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.
5. தள்ளுபடி மற்றும் ஆஃபர்கள்:
பெரிய கடைகளில் அல்லது சூப்பர் மார்க்கெட்களில் வார இறுதி நாட்களில் கிடைக்கும் 'Buy 1 Get 1' ஆஃபர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், அந்தப் பொருட்களின் காலாவதி தேதியை (Expiry Date) சரிபார்க்க மறக்காதீர்கள்!
6. மெம்பர்ஷிப் மற்றும் ரிவார்டு பாயிண்ட்ஸ் (Membership & Reward Points):
பல சூப்பர் மார்க்கெட்டுகளில் இலவசமாக 'Member Card' அல்லது 'Savings Card' கொடுப்பார்கள்.
நீங்கள் ஒவ்வொரு முறை பொருட்கள் வாங்கும்போதும் உங்கள் போன் நம்பரைச் சொன்னால், அதில் குறிப்பிட்ட புள்ளிகள் (Points) சேரும்.
அடுத்த முறை பர்சேஸ் செய்யும்போது, அந்தப் புள்ளிகளைக் கொண்டு பணத்தைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது சலுகை விலையில் பொருட்களைப் பெறலாம்.
இந்தச் சின்னச் சின்ன மாற்றங்கள் உங்கள் மாத பட்ஜெட்டில் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
முக்கிய குறிப்பு:
"இந்தக் குறிப்புகள் அனைத்தும் எனது தனிப்பட்ட அனுபவத்தில் நான் கற்றவை. இதில் உங்களுக்குப் பிடித்தமான குறிப்பு எது? அல்லது நீங்கள் கடைப்பிடிக்கும் ரகசிய முறைகள் ஏதேனும் உண்டா? அதை கீழே உள்ள கமெண்ட் (Comment) பகுதியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்!



கருத்துகள்
கருத்துரையிடுக