நமது வாழ்வை வளமாக்கும் குலதெய்வம்: ஏன் மறக்கக்கூடாது?


ஏன் குலதெய்வம் முக்கியம் என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள் தெரியுமா? 

​நாம் எத்தனையோ கோயில்களுக்குச் செல்கிறோம், எத்தனையோ பரிகாரங்கள் செய்கிறோம். ஆனால், நம் முன்னோர்கள் காட்டிய குலதெய்வ வழிபாட்டை மறந்துவிடுகிறோம்.

தெய்வங்கள் பல இருந்தாலும், நம் குலத்தைக் காக்கும் தெய்வம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் குலதெய்வம். நம் முன்னோர்கள் காட்டிய இந்த வழிபாட்டு முறையின் பின்னால் இருக்கும் ஆன்மீக உண்மைகளை இந்தப் பதிவில் காண்போம்.

குலதெய்வம் என்பது நம் முன்னோர்களால் பல தலைமுறைகளாக வணங்கப்பட்டு வந்த தெய்வம். இது பலருக்கு ஒரு காவல் தெய்வமாகவோ அல்லது ஒரு பெண் தெய்வமாகவோ இருக்கலாம். நம் ரத்தத்தோடும், குடும்ப பாரம்பரியத்தோடும் கலந்த தெய்வம் தான் இந்த குலதெய்வம்.

ஏன் குலதெய்வத்தை மறக்கக்கூடாது? என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள் தெரியுமா?மற்ற தெய்வங்களை விட, குலதெய்வம் தான் நம்முடைய குடும்பத்தின் நலனில் அதிக அக்கறை காட்டும்.நீங்கள் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும், குலதெய்வத்தின் அனுமதி இல்லாமல் அவை முழுமையான பலனைத் தராது.நம் குழந்தைகளுக்குக் குலதெய்வத்தைக் காட்டுவது, என்பது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கித் தருவது போன்றது.

வீட்டில் சுப காரியங்கள் தடைப்பட்டால், முதலில் வருடத்திற்கு ஒருமுறையாவது குடும்பத்தோடு குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பொங்கலிட்டு வழிபட்டு வாருங்கள். முடியவில்லை என்றால், வீட்டிலேயே ஒரு விளக்கேற்றி குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுங்கள்.மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

வேர் இல்லாமல் மரம் இல்லை, அதுபோல குலதெய்வம் இல்லாமல் குடும்பத்தின் வளர்ச்சி இல்லை. உங்கள் குலதெய்வத்தைப் போற்றுங்கள், உங்கள் வாழ்வு வளமாகும்!

நண்பர்களே, உங்கள் குலதெய்வம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? கீழே கமெண்டில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சமயபுரம் மாரியம்மன் 1 ரூபாய் நாணயம் வேண்டுதல்: நினைத்தது நிறைவேற எளிய வழிமுறை!"

தடைகளை உடைத்து சிகரம் தொட்ட தருணம் - 1st Prize!" 🥇

"தொலைந்து போனது நம் சந்தோஷமா? அல்லது குழந்தைப் பருவமா?"